Friday, October 9, 2026

ஜெஃப்ரி எப்ஸ்டீனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் அனைத்தையும் போட்டுடைத்தாள்


அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனால் கரீபியன் தீவும் நியூ மெக்சிகோவில் உள்ள அவரது பண்ணையும் நோக்கி கடத்தப்பட்டதாக கூறப்படும் 43 வயதான கேப் டவுன் பெண்மணி, தாம் அனுபவித்த துயரங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

எப்ஸ்டீனின் மனிதக் கடத்தல் வலையமைப்பு ஆப்பிரிக்காவின் தெற்கு கடற்கரை வரை விரிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு, கேப் டவுனைச் சேர்ந்த 20 வயதான முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவியும் மாடலுமான ஜூலியட் பிரையன்ட், எப்ஸ்டீனால் தனியார் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தனது குடும்பம் நிதி நெருக்கடியில் இருந்ததும், தனது கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையும், குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் காரணமாகவே எப்ஸ்டீனை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Bill Clinton, நடிகர் Kevin Spacey மற்றும் நடிகர் Chris Tucker ஆகியோருடன் கேப் டவுனில் உள்ள ஒரு உணவகத்தில் எப்ஸ்டீனை சந்தித்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஜூலியட் நியூயார்க்கிற்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது. நியூயார்க்கிற்கு வந்த சில மணி நேரங்களுக்குள் கரீபியன் பகுதிக்கு செல்லும்படி அவரிடம் கூறப்பட்டதாகவும், நியூ ஜெர்சியின் டெட்டர்போரோ விமான நிலையத்தில் தனியார் ஜெட் விமானத்தில் ஏறியபோது எப்ஸ்டீனும், கேப் டவுனில் அவரை வேலைக்கு அமர்த்திய பெண்களும் அங்கு காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீவிற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், தனது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அங்கிருந்து தப்பிக்க முடியாதபடி கட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஜூலியட் கூறியுள்ளார். இந்த அனுபவங்களின் காரணமாக தாம் நீண்டகால மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எப்ஸ்டீனைப் பற்றிய தகவல்கள் அல்லது அவரது வழக்குச் சம்பந்தமான மின்னஞ்சல்கள் வெளியான போதெல்லாம் தன்னுக்கு மன ரீதியிலும் உடல் ரீதியிலும் பாதிப்பு ஏற்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். “நான் மதுபோதையிலும் அல்லது மனச்சோர்விலும் இருந்தபோது அந்த மின்னஞ்சல்களை அனுப்பினேன். அவர் எப்போதும் என்னைக் கண்காணித்து கொண்டிருப்பார் என்ற பயம் எனக்குள் இருந்தது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

you may also like