- by Editor
- 8 months ago
கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்று வரை 36 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 19 பேருக்காகவும், மற்றொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சார்பிலும், 16 சுயேச்சை வேட்பாளர்கள் சார்பிலும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் கட்டுப்பணத்தை செலுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளைய தினம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இந்தநிலையில் இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளுக்காக விசேட அதிரடிப்படையினர் உட்பட 1,300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இராஜகிரிய பிரதேசத்தில் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகப் பதில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.