- by Editor
- 4 weeks ago
மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் நேற்று தீப்பந்தம் ஏந்திப் போராட்டம்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூரும் கறுப்பு ஜனவரியை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை மட்டு. காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் ஊடகவியலாளர்கள் தீப்பந்த ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டு. ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இணைந்து முன்னெடுத்த ஏற்பாட்டின்படி அங்கு மாலை 5.00 மணிக்கு ஒன்றினைந்த ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து நினைவு தூபியில் சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தீப்பந்தம் ஏற்றி சுமார் ஒரு மணித்தியாலம் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.