Thursday, October 8, 2026

கட்டுநாயக்கவில் பறவை மோதிய துருக்கி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கம்


தொடர்ந்து பாதுகாப்பாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

TK-731 என்ற விமானம், 246 பயணிகளுடன் இன்று (11) காலை 7.07 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது, அதன் மீது பறவை ஒன்று மோதியதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விமானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நீர்கொழும்பு களப்பு பகுதிக்கு மேலாக தாழ்வாகப் பறந்து எரிபொருளின் அளவைக் குறைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஏ330 (A330) ரகத்தைச் சேர்ந்த இந்த அகல உடலமைப்புடைய பயணிகள் விமானம், தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பின்னர் இன்று காலை 10.24 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

you may also like