Friday, October 9, 2026

சனத் நிஷாந்தவின் ஜீப்பின் சாரதிக்கு விளக்கமறியல்!


கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்டோர் பயணித்த ஜீப் ரக வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது மெய் பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் பயணித்த ஜீப் ரக வாகனத்தின் சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிப்பட்டுள்ளது.

மேற்படி சாரதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.

you may also like