- by Editor
- 3 months ago
சபாநாயகரை சந்தித்தார் ஐ.நா. ஒருங்கிணைப்பாளர்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆன்ட்ரே பிராஞ்ச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நாடாளுமன்றத்தில் சந்தித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள், நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவுள்ள சட்டமூலங்கள், நாடாளுமன்ற அபிவிருத்தி தொடர்பான செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் நாடாளுமன்ற முறைமை தொடர்பில் இதன்போது சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அத்துடன், நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேவை இதற்கு முன்னர் சந்தித்தேன் என குறிப்பிட்ட அவர், நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பில் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவுடனும் மார்க் ஆன்ட்ரே பிராஞ்ச் கலந்துரையாடல் நடத்தினார்.