Friday, October 9, 2026

எரிபொருள்களின் விலைகள் குறைப்பு


இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 283 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 313 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 299 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 185 ரூபாவாகவும் மாற்றமின்றி பேணப்படுகின்றது.


you may also like