Friday, October 9, 2026

எம்.பி. பதவி இழந்த டயனா வெளிநாடு செல்லத் தடை!


நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு இலங்கை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடையாது என உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதேவேளை, டயனா எம்.பி. பதவியை இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முஜிபுர் ரஹ்மானை ஐக்கிய மக்கள் சக்தி நியமித்துள்ளது.

you may also like