Saturday, October 10, 2026

0 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ஜெயராம் - ஊர்வசி கூட்டணி


இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பரிமளா & கோ’ திரைப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி மாஸ்டர், யோகி பாபு, சந்தோஷ் சோபன், அனந்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் படத்தின் ‘வாச்சா உடாத’ வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சென்னை நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

“இந்த கதையில் தனி நம்பிக்கை இருந்தது” -ஊர்வசி

நிகழ்வில் பேசிய நடிகை ஊர்வசி, இந்த படம் தன்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருப்பதாக தெரிவித்தார்.

“ஒரு நடிகராக சில சமயங்களில் மட்டுமே ‘இந்த கதையே உண்மையான ஹீரோ’ என்று தோன்றும். இந்தக் கதையை முதலில் கேட்டவுடனே எனக்கு அந்த உணர்வு வந்துவிட்டது. முழு திரைக்கதையையும் கேட்ட பிறகு, இந்த படத்தின் மீது இன்னும் அதிக நம்பிக்கை உருவானது,” என்றார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயராமுடன் கூட்டணி

மேலும் பேசிய அவர், “ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து படம் செய்யவில்லை. இதற்கு முன் சுமார் 25 படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம்,” என்று கூறினார்.

“இயல்பான நகைச்சுவையுடன் சொல்லப்பட்ட கதை”

பல கதைகள் இருவரிடமும் வந்தபோதும், இருவருக்கும் ஒரே நேரத்தில் பிடித்த கதை இதுதான் என ஊர்வசி தெரிவித்தார்.

“இது வெறும் சீரியஸான கதை அல்ல. உண்மையான வாழ்க்கை உணர்வுகளுடனும், இயல்பான நகைச்சுவையுடனும் சொல்லப்பட்ட ஒரு அழகான கதை,” என்று அவர் பாராட்டினார்.

படப்பிடிப்பு அனுபவம் மகிழ்ச்சியானது

மலையாள படப்பிடிப்புகளால் பயணம் அதிகமாக இருந்தபோதும், அனைத்து சவால்களையும் சமாளித்து இந்தப் படத்தில் நடித்ததாக கூறிய ஊர்வசி, “ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது” என்றார்.

you may also like