- by Editor
- 3 months ago
தெற்கு காசாவை நோக்கி படையெடுக்கும் மக்கள்
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்தும் இருவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அங்குள்ள மக்கள் தெற்கு காசாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் வடக்கு காசாவை விட்டு வெளியேறியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் தொடங்கிய ஒரு வாரத்தில் இஸ்ரேல் இராணுவம் விடுத்த எச்சரிகையை அடுத்து முன்னதாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தெற்கு காசாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்கலில் பலர் சோதனை சாவடிகளை கடக்கும் போது இஸ்ரேலிய படைகளால் கைது செய்யப்படுகின்றனர் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் இஸ்ரேல் இராணுவம் காசாவின் வடக்குப் பகுதியை மட்டுமல்லாமல் கான் யூனிஸ் நகரம் உட்பட தெற்குப் பகுதியையும் தொடர்ந்து தாக்கிவருகிறமை குறிப்பிடத்தக்கது.