- by Editor
- 2 years ago
10 மணி நேர நீர் வெட்டு.
10 மணி நேர நீர் வெட்டு.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, கம்பஹாவின் பல பகுதிகளில் இன்று 10 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
அவ் அறிவித்தலின் படி, காலை 8.30 முதல் மாலை 6.30 வரை பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் சீதுவ நகர சபை பகுதிகளுக்கும், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான மற்றும் மினுவாங்கொட ஆகிய பிரதேச சபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.