Saturday, October 10, 2026

உலகம் முழுதும் நாளை வெளியாகும். உலகநாயகனின் 'தக் லைப்'


உலகம் முழுதும் நாளை வெளியாகும். உலகநாயகனின் 'தக் லைப்'

கமல்ஹாசன் - மணிரத்னம் - சிம்பு கூட்டணியில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'தக் லைப்' திரைப்படம் நாளை (05) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில், 'தக் லைப்' படக்குழு தற்போது செய்தியாளர்களை சந்தித்தபோது கமல்ஹாசன் “தனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி“ என தெரிவித்துள்ளார்.

 தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

 '' நான் பார்த்த இளைஞர் மணி இன்று சினிமா ஞானியாக இருக்கிறார். அவருடன் பணிபுரிவது எனக்கு குதூகலமாக இருந்தது. சர்வதேச தரத்தில் 'தக் லைப்' உருவாகியுள்ளது.

 உயிரே, உறவே, தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன். என்றும் உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி. என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


you may also like