- by Editor
- 8 months ago
எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல் இரங்கல்
-
- by Editor,
- 2 months ago
- in இந்திய செய்திகள்
திரையுலகின் மகத்தான பாடகி எஸ்.ஜானகி காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் உடல்நலக்குறைவு காரணமாக பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
“தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்.” என்று கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.