Monday, October 12, 2026

மலையகத் தமிழர்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகள்: இந்திய நிதி அமைச்சர் தெரிவிப்பு


"மலையகத் தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா எல்லா வகையான உதவிகளையும் வழங்கும். மலையகத் தமிழ் மக்களுக்காக மேலும் 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும்."

- இவ்வாறு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற 'நாம் 200' நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"200 ஆண்டுகளாக மலையகத் தமிழ் மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இலங்கை நாடு நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய தொண்டு ஆற்றியுள்ளனர். வலிகளைத் தாங்கிக்கொண்டு தேநீர் என்றாலே இலங்கைதான் என்ற நிலைக்கு இந்நாட்டை உயர்த்தியுள்ளனர்.

மலையக மக்களின் கஷ்டத்தை புரிந்துதான் பல்வேறு திட்டங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன்படி 10 ஆயிரம் வீட்டு திட்டம் இன்று (நேற்று) ஆரம்பிக்கப்படுகின்றது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும். ஆசிரியர் பயிற்சியும் வழங்கப்படும். இவ்வாறு இலங்கை அரசுடன் இணைந்து மலையக மக்களுக்காக எல்லா வகையான உதவிகளும் வழங்கப்படும்." - என்றார். 

you may also like