- by Editor
- 1 month ago
முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தன கைது
-
- by Editor,
- 7 months ago
- in இலங்கை செய்திகள்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (09) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு கைதாகியுள்ளார்.
இன்று முற்பகல் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அவர் முன்னிலையானார்.
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில் வாக்குமூலம் வழங்கலின் பின்னர் அவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது.