Saturday, October 10, 2026

பங்களாதேஷை வீழ்த்தி - இலங்கை அமோக வெற்றி!


பங்களாதேஷை வீழ்த்தி - இலங்கை அமோக வெற்றி!

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான, எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் நான்காவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025-27 சுழற்சிக்கான அத்தியாயத்தில் இலங்கை தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளதுடன், முதலாவது வெற்றி புள்ளிகளையும் ஈட்டிக்கொண்டது.

போட்டியின் நான்காம் நாளான இன்று சனிக்கிழமை (28) காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து பங்களாதேஷ், கடைசி 4 விக்கெட்களை மேலதிக ஓட்டங்களுக்கு இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் தோல்வி அடைந்ததுள்ளது.

மேலும், இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் முதலாவது இன்னிங்ஸில்: சகலரும் ஆட்டம் இழந்து 247 பெற்றுக்கொண்டது.

இலங்கை முதலாவது இன்னிங்ஸில்: சகலரும் ஆட்டம் இழந்து 458 பெற்றது.

பங்களாதேஷ் இரண்டாவது இன்னிங்ஸில்: சகலரும் ஆட்டம் இழந்து 133 பெற்றது.

பந்து வீச்சில் பிரபாத் ஜயசூரிய 56 - 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியமை குறிப்பிட்டத்தக்கது.

you may also like