- by Editor
- 2 years ago
கனமழையால் பாதிப்பா? அவசர உதவி மற்றும் மீட்புப் பணிகளுக்கு 117-ஐ அழைக்கவும்
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
கனமழையால் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமைகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் பேரிடர் மேலாண்மை மையம் 117 என்ற அவசரகால தொலைபேசி இலக்கத்தைச் செயல்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான தகவல்களை வழங்குதல் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதை இவ்வவசர இலக்கத்தின் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் அவசர தேவைகளுக்கு விரைவான பதிலளிப்பை வழங்குவதற்கும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை திறம்பட முன்னெடுப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எனவே, கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அல்லது அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் 117 என்ற அவசர இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.