- by Editor
- 2 years ago
அ.தி.மு.க. யாருக்கும் அடிமை கிடையாது : எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பு
-
- by Editor,
- 7 months ago
- in இந்திய செய்திகள்
அதிமுக சுதந்திரமான கட்சி. அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது. ஆனால், திமுக காங்கிரசுக்கு அடிமையாக இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட அரியப்பம்பாளையத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அதிமுக சுதந்திரமான கட்சி. அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது. ஆனால், திமுக காங்கிரசுக்கு அடிமையாக இருக்கிறது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது ஆட்டம் கண்டுவிட்டது. இந்தத் தேர்தலில் அந்தக் கூட்டணி நீடிப்பது சந்தேகமே.
நான் படிப்படியாக உழைத்து முதல்வர் நிலைக்கு வந்தவன். ஆனால் ஸ்டாலின் தனது தந்தை வழியில் அந்தப் பதவியைப் பெற்றவர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ளது.
கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
பார்கள் மூலம் ஊழல் செய்து, அந்தப் பணத்தைக் கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்க திமுக திட்டமிட்டுள்ளது.
மின்கட்டணம் 62% உயர்த்தப்பட்டிருப்பதையும், நகராட்சிகளில் குப்பை வரி மற்றும் குடிநீர் கட்டண உயர்வையும் சுட்டிக்காட்டி “வரி மேல் வரி போட்டு மக்களை வதைக்கிறார்கள்”.
திமுக ஆட்சியில் கல்வித்தரம் குறைந்துவிட்டது. அதிமுக ஆட்சியின் சாதனைகள் உச்சத்தை எட்டின.
11 மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக்கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 28 கலை அறிவியல் கல்லூரிகளை எனது ஆட்சியில் கொண்டு வந்தேன்.
அதிமுக ஆட்சியில் உயர்கல்வி கற்போரின் விகிதம் 52% ஆக இருந்தது, தற்போது அது 48% ஆகக் குறைந்துவிட்டது.
“நாங்கள் திட்டங்களைக் கொடுத்து மக்களைச் சந்திக்கிறோம். ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்துக் காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும்.”- என்றார்.