- by Editor
- 7 months ago
வெள்ளை மாளிகையில் தேநீர் விருந்து... எல்லையில் போர் மேகங்கள் - மன்னர் சார்லஸின் சவாலான பயணம்
-
- by Editor,
- 5 months ago
- in இலங்கை செய்திகள்
அமெரிக்காவின் சுதந்திரத்தின் 250வது ஆண்டு விழாவைக் குறிக்கும் நான்கு நாள் அரசுமுறைப் பயணத்திற்காக, மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா திங்களன்று அமெரிக்கா வந்தடைந்தனர். இருப்பினும், இப்பயணத்தின் மீது நிலவும் ராஜதந்திரப் பதற்றங்கள் ஒரு நிழலை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விஜயத்தின் போது, அவர்கள் வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் ஆகியோரை சந்தித்து தேநீர் அருந்தினர். அதனைத் தொடர்ந்து, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள பிரிட்டிஷ் தூதரின் இல்லத்தில் நடைபெற்ற தோட்ட விருந்திலும் கலந்துகொண்டனர்.
இப்பயணம், ஈரான் தொடர்பான போர் நிலைமையால் அமெரிக்கா–பிரிட்டன் உறவுகள் சிக்கலான நிலையில் உள்ள நேரத்தில் நடைபெறுகிறது. இராணுவ ஆதரவை வழங்க மறுத்ததற்காக, பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மீது அதிபர் டிரம்ப் விமர்சனம் வெளியிட்டுள்ளார். இதன் பின்னணியில், அரசியல் நடுநிலையைப் பேண வேண்டிய நிலையில் இருந்தாலும், மன்னரின் இந்த விஜயம் இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தைத் தணிக்க உதவும் என பிரிட்டிஷ் அரசு நம்புகிறது.
இதற்கிடையில், சனிக்கிழமையன்று வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தலைநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், புதன்கிழமை காங்கிரஸில் நடைபெறவுள்ள கூட்டு அமர்வில் உரையாற்றும் போது, மன்னர் சார்லஸ் இந்தச் சம்பவத்தை சுருக்கமாகக் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.