Friday, October 9, 2026

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம்


பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இன்று (13) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

சபாநாயகரால் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த முறைப்பாடு பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்ட தரப்பினரால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அளிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே சமிந்த குலரத்ன இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may also like