- by Editor
- 2 years ago
'இலங்கையின் நட்புறவு அவசியம்'
இந்தியா பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 2 ஆம் இடத்துக்கு முன்னேற பாகிஸ்தான், இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளுடன் நட்புறவு கொண்டிருத்தல் அவசியம் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றுகையில்,
உலகில் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 5 ஆம் இடத்தில் உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் 2 ஆம் இடத்துக்கு முன்னேற பல்வேறு சவால்கள் உள்ளன. குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளுடன் நட்புறவு தொடர வேண்டியது மிகவும் அசியம்.
அடுத்த 40 ஆண்டுகள் உலக வளர்ச்சியை நிர்ணயிக்கும் லித்தியம் போன்ற முக்கிய கனிமங்கள் ஆபிரிக்க நாடுகளில் அதிகம் உள்ளன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள் மீது சீனா 70 சதவீதம் கட்டுப்பாட்டை கொண்டுள்ளது. அமெரிக்கா 20 சதவீதம் மட்டுமே கட்டுப்பாடு கொண்டுள்ளது. இந்தியா போன்ற மற்ற நாடுகள் 10 சதவீத கட்டுப்பாடுகளை மட்டுமே கொண்டுள்ளன. கடும் சரிவில் இருந்து பொருளாதாரத்தை மீட்டு உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 2 ஆம் இடத்துக்கு சீனா கொண்டு சென்றுள்ளது என்றார்.