Sunday, October 11, 2026

இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்


இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இன்று (16) காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பாலு நகரிலிருந்து தென்கிழக்கே சுமார் 42 கிலோமீற்றர் தொலைவில், பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என இந்தோனேசியாவின் புவி இயற்பியல் மற்றும் வானிலை ஆய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுவரை உயிரிழப்புகள் அல்லது பாரிய அளவிலான சொத்துச் சேதங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்ட போதிலும், தற்போது அவசர நிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

you may also like