Friday, October 9, 2026

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்: கே.எல். ராகுல் நீக்கம்!


ராஞ்சியில் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்தும் இந்திய வீரர் கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.

உபாதை காரணமாக அவர் விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட்டில் இடம்பெற்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் இடம்பெற்றிருக்கவில்லை.

ஹைதராபாத்தில் நடந்த தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர் கே.எல். ராகுல் உபாதைக்கு உள்ளானார்.

கடந்த 12 ஆம் திகதி ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்ட அறிவிப்பில் கே.எல். ராகுல் 90 சதவீதம் உடற்தகுதியை அடைந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

எனினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் அவர் பூரணமாக குணமடையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு அணி நிர்வாகத்தால் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


you may also like