Friday, October 9, 2026

சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக ரஜீவ் அமரசூரிய தெரிவானார்


2025-2026 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29 ஆவது தலைவராகச் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது போட்டியாளர் வேட்பாளர் சட்டத்தரணி சுனில் அபேரத்னவை விடப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளார்.

உத்தியோகப்பூர்வ முடிவுகளின்படி, ரஜீவ் அமரசூரிய 4,497 வாக்குகளைப் பெற்றார்.

அவருக்கு எதிராகப் போட்டியிட்ட வேட்பாளர் சுனில் அபேரத்ன 1,667 வாக்குகளைப் பெற்றார்.

ரஜீவ் அமரசூரிய 2,830 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


you may also like