- by Editor
- 2 weeks ago
கிளிநொச்சி அக்கராயன்குளத்தில் அதிகாரிகள் மீது தாக்குதல் - 9 பேர் கைது
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
கிளிநொச்சி, அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி சட்டவிரோதமாக அழிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து சோதனை நடத்தினர்.
சோதனையின்போது அங்கிருந்த சிலர் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக STF அதிகாரிகள் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த STF அதிகாரிகள் நால்வர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் காட்டை அழிக்க பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.