- by Editor
- 2 years ago
அட்லி இயக்கத்தில் ஷாருக் - விஜய்!
-
- by Editor,
- 2 years ago
- in சினிமா செய்திகள்
இயக்குநர் அட்லி இயக்கத்தில் இணைந்து நடிக்க ஷாருக்கான் - விஜய் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என அட்லி கூறியுள்ளார்.
நேற்று (15) வெளியாகியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அட்லி இதனைத் தெரிவித்தார்.
அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக மூன்று படங்களில் நடித்துள்ளார் தளபதி விஜய். அந்த மூன்று படங்களுமே வெற்றிகரமாக அமைந்த நிலையில், இந்தி நடிகர் ஷாருக்கான் அட்லிக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான யவான் திரைப்படம் பட்டிதொட்டியெல்லாம் வசூல் மழை பொழிந்து ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல் அள்ளிக் குவித்தது.
இந்நிலையில், தென்னிந்திய பிலபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றிவரும் கோபிநாத், அட்லிடியின் நேர்காணலை பாகம் பாகமாக தமது யூடியூப் சனலில் வெளியிட்டு வருகின்றார்.
இதில் நேற்று வெளியிடப்பட்ட மூன்றாவது பாகத்தில், ஷாருக்கான் - விஜயை வைத்து இயக்கும் திட்டம் குறித்து அட்லி தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட ஷாருக்கான் - விஜய் ஆகியோர், அன்றையதினம் தாம் இருவரும் இணைந்து நடிக்கும் விருப்பத்தைத் தம்மிடம் தெரிவித்தனர் என அட்லி கூறியுள்ளார்.
இதையடுத்து இரு கதாநாயகர்களுக்கான கதையைத் தயார் செய்யும் பணியில் தாம் முழு வீச்சுடன் செயற்பட்டு வருகிறார் எனத் தெரிவித்த அட்லி, இருவரையும் வைத்துப் படம் இயக்கும் சூழல் விரைவில் உருவாகும் என தாம் நம்புகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.