Friday, October 9, 2026

3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு பௌதீகவியலுக்கான நோபல் பரிசு


உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு அறிவிப்புத் தொடரில், நேற்று பௌதீவியலுக்கான நோபல் பரிசு மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

இலத்திரனியல் மற்றும் குவாண்டம் அறிவியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஆய்வுகளுக்காக, ஜோன் கிளார்க், மைக்கல் எச். டெவோரெட் மற்றும் கோன் எம். மார்ட்டினிஸ் ஆகியோருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களின் இந்த கண்டுபிடிப்புகள் குவாண்டம் கிரிப்டோகிராபி, குவாண்டம் கணினிகள், மற்றும் குவாண்டம் சென்சர்கள் போன்ற அதிநவீன சாதனங்களை உருவாக்குவதற்கான புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன.

நோபல் பரிசு அறிவிப்புகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின.

நேற்று முன்தினம் 2025 ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ. புரூன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல், மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

நோய் எதிர்ப்புச் சக்தியின் 'புறத் தாங்குதிறன்' குறித்த அவர்களின் கண்டுபிடிப்புகளுக்காக இவர்களுக்கு இந்தப் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

நேற்று இயற்பியலுக்கான பரிசு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

நோபல் பரிசு வென்றவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


you may also like