Saturday, October 10, 2026

ரயிலில் பொதிகளை அனுப்ப அதிகரிக்கப்பட்டன கட்டணங்கள்


ரயில்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண அதிகரிப்பானது இன்று (01) முதல் நடைமுறைக்குவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணங்களை திருத்தம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தலானது கடந்த 18 ஆம் திகதி போக்குவரத்த அமைச்சர் பந்துல குணவர்தனவால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 50 ரூபாவாக இருந்த குறைந்த பட்சக் கட்டணம் 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

you may also like