Saturday, October 10, 2026

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை திடீர் வீழ்ச்சி


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (20) மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தின் இன்றைய தரவுகளின்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 103.0 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110.1 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, அதன் விலை 3.105 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள போதிலும், உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை குறைவானது எரிசக்தி நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளர்களுக்குச் சாதகமான ஒரு மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், பிராந்தியத்தில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக, வரும் நாட்களில் எரிசக்தி விலைகளில் மேலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனச் சந்தை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

you may also like