- by Editor
- 2 years ago
கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து
-
- by Editor,
- 5 months ago
- in இலங்கை செய்திகள்
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதைக் கருத்தில் கொண்டு, இன்று (15) முதல் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய, கூடுதல் பஸ் சேவைகளை இயக்க அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதன் போக்குவரத்துப் பணிப்பாளர் ஷெரின் அதுகோரள தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று சாதாரண அலுவலக நாளாக இருப்பதால் அலுவலக ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில் சேவைகளும் இயக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வேயின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.