Tuesday, October 6, 2026

2025 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகள் - நவம்பரில் !


2025 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகள் - நவம்பரில் !

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை நடைபெறும் திகதி பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய பரீட்சைகள் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிகழ்நிலை விண்ணப்பங்கள் ஜூன் 26, 2025 முதல் ஜூலை 21, 2025 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

எனவே, பாடசாலை மாணவர்கள் தங்கள் அதிபர்கள் மூலமாகவும், தனியார் மாணவர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணைப் பயன்படுத்தி சுயாதீனமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் உத்தியோகபூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஐப் பார்வையிட்டு , அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை கவனமாகப் படித்து அதற்கேற்ப தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஜூலை 21 ஆம் திகதி நள்ளிரவு கடைசி திகதிக்குப் பிறகு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான நீட்டிப்புகள் எந்த சூழ்நிலையிலும் வழங்கப்பட மாட்டாது என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் விசாரணைகளுக்கு, விண்ணப்பதாரர்கள் பரீட்சைகள் திணைக்களத்தை பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

தொலைபேசி எண்கள்: 011-2784208 / 011-2784537 / 011-2785922

அவசர அழைப்பு: 1911

மின்னஞ்சல்: gcealexam@gmail.com

மேலும், தகுதி நீக்கத்தைத் தவிர்க்க, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பூர்த்தி செய்யுமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may also like