- by Editor
- 2 years ago
திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்குத் தடை!
-
- by Editor,
- 1 month ago
- in இந்திய செய்திகள்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜி.எஸ்.எல்.வி - எஃப்17 ரொக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு உள்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழவேற்காடு ஏரி மற்றும் கடல் பகுதி அருகே உள்ள உள்ள ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவன் ரொக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கிருந்து விண்வெளித் துறை சார்பில் ரொக்கெட்கள் ஏவப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், எதிர்வரும் 4 ஆம் திகதி அதிகாலை செயற்கைக்கோளுடன் ரொக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதனால், கடலில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்கு மீன்வளத் துறையினர் தடை விதித்துள்ளனர்.