- by Editor
- 2 days ago
வனிந்து மற்றும் பதும் காயம் காரணமாக டி20 அணியிலிருந்து விலகல்
-
- by Editor,
- 1 day ago
- in விளையாட்டு செய்திகள்
பாகிஸ்தானுக்கு எதிரான இருபது20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் இருபது20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
குசல் மெண்டிஸ் தலைமையிலான இந்த அணியில், கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிசங்க மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ஆகியோருக்குப் பதிலாக, இளம் வீரர் சினத் ஜெயவர்தன மற்றும் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்தன் வியாஸ்காந்த் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் குசல் மெண்டிஸுக்குப் பதிலாக இலங்கை அணிக்கு தலைமை தாங்கிய சரித் அசலங்க, பாகிஸ்தானுக்கு எதிரான இத்தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இருபது20 தொடரில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.