- by Editor
- 1 year ago
மதுராந்தகம் தொகுதி இன்று முதல்வர் வாக்குச் சேகரிப்பு
-
- by Editor,
- 2 days ago
- in இந்திய செய்திகள்
மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து கடந்த 25 ஆம் திகதி முதல்வர் விஜய் முதல்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மதுராந்தகம் தொகுதியில் இன்று முதல்வர் விஜய் வீதி பேரணி மூலமாக வாகனத்தில் இருந்தபடி மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
பனையூர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு முர்கள்வர் மாமண்டூர் செல்கின்றார். அங்கிருந்து புக்கத்துறை, பழையனூர், படாளம், ஜானகிபுரம், மேலவலம்பேட்டை, கருங்குழி, மதுராந்தகம் புறவழிச்சாலை, மோச்சேரி, மொரப்பாக்கம், தண்டலம், பெரும்பாக்கம், எல்.எண்டத்தூர், செம்பூண்டி, பசுவங்கரணை, கீழாமூர், ராமாபுரம், மோகல்வாடி, பொற்பனங்கரணை, எலப்பாக்கம், ஆனைக்குன்னம், கீழ் அத்திவாக்கம், கடமலைபுத்தூர், பெரும்பேர்கண்டிகை, தேன்பாக்கம், மேல்மருவத்தூர் கோயில் சந்திப்பு, சோத்துப்பாக்கம், மாம்பாக்கம் உட்பட 39 இடங்களில் வாகனம் மூலம் முதல்வர் விஜய் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
இந்த வீதிப் பேரணியை ஒருங்கிணைக்கும் பணிகளுக்காக ராஜ்மோகன், மரியவில்சன், வினோத், ராஜீவ், சரத்குமார், தென்னரசு, ரஞ்சித்குமார், ராஜ்குமார், காந்திராஜ் மற்றும் ரா.குமார் ஆகிய 10 பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வரின் வருகையையொட்டி ஏராளமான மக்கள் திரள வாய்ப்புகள் இருப்பதால் இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.