- by Editor
- 2 years ago
18 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 18 இந்திய மீனவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 18 இந்திய மீனவர்கள் இரண்டு படகுகளில் கிளிநொச்சி கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இன்று காலை கிளிநொச்சி மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
அதன்பின்னர் அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படுவர்.