- by Editor
- 7 months ago
உடுப்பிட்டியில் மதுபானசாலைக்கு எதிராகக் கடையடைப்புப் போராட்டம்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
யாழ். வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக இன்று கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீளத் திறக்கப்பட்ட மதுபானசாலையால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதனை உடனடியாக அகற்றக் கோரி இன்று காலையில் இருந்து மதியம் வரை உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடைகளைப் பூட்டி கடையடைப்புக்கு உடுப்பிட்டி சமூக மட்ட அமைப்புக்கள் ஒன்றாக சேர்ந்து அழைப்பு விடுத்துள்ளன.
வணிக நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள், சந்தை வியாபாரிகள் அனைவரும் இதற்கான ஆதரவைத் தெரிவித்துள்ளன.
அதேவேளை, கண்டன ஆர்ப்பாட்டமும் உடுப்பிட்டிச் சந்தியில் இருந்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
சமூக அக்கறை உள்ளவர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரையும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தருமாறு உடுப்பிட்டி சமூக மட்ட அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.