- by Editor
- 4 months ago
வெயில் தீவிரம் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு அவதானிப்பு அறிவிப்பு
-
- by Editor,
- 7 months ago
- in இலங்கை செய்திகள்
இலங்கையின் சில மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் கொழும்பு, கம்பஹா, வவுனியா, மன்னார், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்ப அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் அதிக நேரம் வெயிலில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறும், போதியளவு நீர் அருந்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.