Wednesday, October 7, 2026

140 கோடி இந்தியர்களுக்கான வரவு செலவுத்திட்டம் - பிரதமர் மோடி


2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்று இருந்த நிலையில், பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, "மத்திய வரவு செலவுத் திட்டம்140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். 2047 வளர்ந்த இந்தியா திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. அருமையான வரவு செலவுத் திட்டத்தினை அளித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாதனை படைத்துள்ளார். இளைஞர்களின் திறமையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் வரவு செலவுத் திட்டம்" என தெரிவித்துள்ளார்.

மேலும், "இன்றைய வரவு செலவுத் திட்டம் ஒரு வரலாற்று சிறப்புமிக்கது, ஏனெனில் இது பெண் சக்திக்கு - இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒரு பெண் நிதியமைச்சராக, நிர்மலா ஜி தொடர்ந்து 9ஆவது முறையாக மத்திய வரவு செலவுத் திட்டத்தினை தாக்கல் செய்து ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்த வரவு செலவுத் திட்டம் பல துறைகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த எதிர்கால நோக்கமுடைய வரவு செலவுத் திட்டத்தினை இந்தியாவை செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களின் மையமாக மாற்றும்," என்றார்.

you may also like