Sunday, October 4, 2026

அதிசயமாய் உயிர் தப்பிய பயணிகள் - வனவாஸல அருகே ரயில் தடம் புரண்டு கோர விபத்து


இன்று (16) அதிகாலை வனவாசல மற்றும் ஹூணுபிட்டிய இடையிலான ரயில் பாதையில் பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டதில், ஒரு பயணிகள் பெட்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அண்மையிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 3.25 மணியளவில் பொல்கஹவெலையிலிருந்து புறப்பட்ட இந்த ரயில், தெற்கு களுத்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 


you may also like