- by Editor
- 2 years ago
மூதூரில் காணாமல்போன இளம் பெண் கிணற்றிலிருந்து நேற்று சடலமாக மீட்பு!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து காணாமல்போயிருந்தார் என்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான பெண்ணினுடையது எனச் சந்தேகிக்கப்படும் சடலமும், அவரது கைப்பையும் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மூதூர் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கமைய முறைப்பாட்டை விசாரித்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமான கிணற்றை மூதூர் நீதிமன்ற நீதிவான் திருமதி எச்.எம். தஸ்னீம் பௌசான், திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று தோண்டியபோதே, பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி என்ற திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான, கணவரால் கைவிடப்பட்டிருந்த 25 வயதான பெண் காணாமல்போயிருந்தமை தொடர்பில், அவரது குடும்பத்தினரால் மூதூர் பொலிஸ் நிலையத்தில் இந்த மாதம் முதலாம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் பெண்ணின் காதலன் தற்போது தலைமறைவாகியுள்ளார். இவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கக் கூடும் எனக் கூறப்படுகின்றது. இதேவேளை, இவரின் குடும்பத்தவர்களும் தலைமறைவாகியுள்ளன என்று அறியமுடிகின்றது.
தற்போது சடலம் கண்டெடுக்கப்பட்ட கிணறு உள்ள காணி உரிமையாளர், கிணற்றில் சடலத்தை மறைக்க உதவிய கனரக வாகன சாரதி, குப்பைகளைக் கிணற்றில் இட்டு அதனை மூடியவர் ஆகிய மூவரையும் கைது செய்யுமாறு மூதூர் நீதிவான் உத்தரவிட்டு, வழக்கை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.