Saturday, October 10, 2026

13 இலட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை!!


13 இலட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை!!

இலங்கையில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூலை மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 13 இலட்சத்து 13 ஆயிரத்து 232 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை மாதத்தின் 23 நாட்களில் 145,188 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். மேலும், இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 269,780 ஆகும்.

: இவ் ஆண்டு நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகள்,

- ஐக்கிய இராச்சியத்திலிருந்து 124,652 சுற்றுலாப் பயணிகளும்,

- ரஷ்யாவிலிருந்து 114,644 சுற்றுலாப் பயணிகளும்,

- ஜெர்மனியிலிருந்து 82,096 சுற்றுலாப் பயணிகளும்,

- சீனாவிலிருந்து 75,081 சுற்றுலாப் பயணிகளும்,

- பிரான்ஸிலிருந்து 69,189 சுற்றுலாப் பயணிகளும்,

- அவுஸ்திரேலியாவிலிருந்து 58,633 சுற்றுலாப் பயணிகளும்,

இவ்வாண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like