- by Editor
- 10 months ago
இந்தியாவில் விமான விபத்து: 242 பயணிகள் பயணித்தனர்
-
- by Editor,
- 1 year ago
- in இந்திய செய்திகள்
இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று 242 பயணிகளுடன் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அகமதாபாத் - மேகனி நகரில் விமானம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி பயணித்த போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகளுடன் விபத்துக்குள்ளானமை தொடர்பில் Air India விமானப் போக்குவரத்து நிறுவனத்தால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி விமாத்தில் 242 பயணிகள் சென்ற நிலையில் அதில் பயணித்த பயணிகள் தொடர்பில் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தின் போது விமானத்தில், 169 இந்தியர்களும், 53 பேர் பிரித்தானிய நாட்டவர்களும், 1 கனடா நாட்டவரும் மற்றும் 7 பேர் போர்த்துக்கள் நாட்டவர்களும் இருந்தனர் என கூறப்பட்டுள்ளது.
7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதேவேளை, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.