- by Editor
- 2 years ago
1,189 விபத்துக்களில் 136 பேர் பரிதாபச் சாவு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இலங்கையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜனவரி 25 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் ஆயிரத்து 189 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்களில் 136 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதேவேளை, கடந்த ஆண்டு 22 ஆயிரத்து 804 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 2 ஆயிரத்து 280 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.