Wednesday, October 7, 2026

மலையக மார்க்க ரயில் சேவைகள் பல இரத்து


மலையக ரயில் மார்க்கத்தின் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால், ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

கடுகன்னாவை பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால், கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் பொடி மெனிக்கே ரயில் அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதல்கஸ்ஹின்ன பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் உடரட்ட மெனிக்கே ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிக மழை மற்றும் காற்றுடனான வானிலையினால் ரயில் மார்க்கங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்திற்கொண்டு கொழும்பு - பதுளைக்கிடையிலான இரண்டு இரவு நேர தபால் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.


you may also like