Friday, October 9, 2026

‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதி


சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல இந்திய சொத்து அபிவிருத்தி நிறுவனமான ‘கிரிஷ்’ நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நீதிமன்றத்தின் முன் அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் வாக்குமூலம் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

you may also like