- by Editor
- 2 years ago
ஹவார்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களுக்கு தடை.
ஹவார்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களுக்கு தடை.
ஹவார்ட் பல்கலையில் சேரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவை தடை செய்யும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு 12 நாட்டவர்களுக்கு தடை விதித்து பிரகடனத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையில், தற்போது ஹவார்ட் பல்கலையில் சேரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவை தடை செய்யும் உத்தரவை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து வெளியிட்ட டொனல்ட் ட்ரம்ப்,
ஹவார்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பது தேச பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதி அமெரிக்க நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.