Friday, October 9, 2026

கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானை தாக்கி பேருந்து விபத்து : 10 பேர் காயம்


கதிர்காமம்–புத்தல வீதியில் காட்டு யானை ஒன்று தனியார் பேருந்தை தாக்கியதில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (03) காலை 11 மணியளவில் கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிர்காமம்–புத்தல வீதியில், மின்சார வேலி காவலரணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சிலாபத்திலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, புத்தல–கதிர்காமம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதியில் நின்றிருந்த காட்டு யானை பேருந்தை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

யானையின் தாக்குதலைத் தொடர்ந்து பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதாகவும், விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த சுமார் 10 பேர் சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

you may also like