- by Editor
- 7 months ago
ஹங்கேரியில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 12 போலந்து சுற்றுலாப் பயணிகள் பலி
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
போஸ்னியாவில் உள்ள புனித தலமொன்றுக்கு சென்று விட்டு போலந்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பயணித்த பேருந்து, ஹங்கேரியில் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இருந்து சுமார் 140 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மெஸோகெரெஸ்டெஸ் பகுதியில், உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் 57 பயணிகளும் இரு சாரதிகளும் இருந்துள்ளனர். இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாரதி தூங்கியதன் காரணமாகவே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய சாரதி தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சோக சம்பவத்துக்கு ஹங்கேரி மற்றும் போலந்து நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.