- by Editor
- 10 months ago
வெசாக் தானசாலைகள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்
-
- by Editor,
- 4 months ago
- in இலங்கை செய்திகள்
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து தானசாலைகளும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும், சிறப்பு வைத்தியருமான டாக்டர் அசெல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தானசாலைகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட பகுதிகளின் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தானசாலை ஏற்பாட்டாளர்கள் பதிவு செய்வதற்கு முன்னர், தங்கள் பகுதிகளில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது பொது சுகாதார ஆய்வாளர்களை சந்தித்து தேவையான சுகாதார ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பான, சுத்தமான மற்றும் தரமான உணவுகளை வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.