Saturday, October 10, 2026

விமல் வீரவங்சவின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்


முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச எழுதிய ‘நெத்த வெனுவட்ட எத்த’ (Naththa Wenuwata Aththa) என்ற நூல் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை மீறல் வழக்கில், அவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று (09) நிராகரித்துள்ளது.

குறித்த நூலில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்துரிமை மீறப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கொழும்பு வணிக மேல் நீதிமன்றம், ரில்வின் சில்வாவுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விமல் வீரவங்ச உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், குறித்த மேன்முறையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், அதனைத் தள்ளுபடி செய்ததுடன், கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

you may also like